மணிப்பூர் சம்பவம் நாட்டுக்கே அவமானம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; பிரதமர் மோடி சூளுரை..!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 2:09 pm
Quick Share

மணிப்பூர் சம்பவம் நாட்டுக்கே அவமானம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3 தேதி முதல் கலவரம் நடந்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ராணுவம், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் கலவரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனிடையே, இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது ;- நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியம். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயராக உள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குற்றறவாளிகள் தப்ப முடியாது, என தெரிவித்துள்ளார்.

Views: - 421

0

0