ஒரு பக்கம் இந்திக்கு எதிர்ப்பு.. மறுபக்கத்தில் இந்தி மொழியில் மருத்துவப்படிப்பு : இந்த வருடமே அறிமுகம்.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 9:46 pm

நாட்டிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது, மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம்.

இதற்காக, மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இந்தி மொழியில் பாடம் கற்பிக்க ம.பி., அரசு திட்டமிட்டது. ஹிந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க கடந்த பிப்ரவரியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.


முதலாம் ஆண்டில் ஹிந்தியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மொழி இந்தியாக இருந்தாலும், முக்கியமான கலைச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும்.

மாநிலத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஹிந்தி மொழியிலும் கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?