காணாமல் போன பாஜக தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : படுகாயங்கள் உள்ளதால் சாவில் மர்மம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 2:38 pm

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சோம்ராஜ். இவர் திடீரென நேற்று காணாமல் போனார். அவரை பல இடங்களிலும் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சோம்ராஜின் வீட்டுக்கு சிறிது தொலைவில் மரம் ஒன்றில் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டு உள்ளது. உயிரிழந்த அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.

இதனை கவனித்த கிராமவாசி ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சென்று உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹிராநகரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்து உள்ளனர். மருத்துவ மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கத்துவா மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கொத்வால் அமைத்துள்ளார். குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு நடத்தப்படுவார்கள் என அவர் உறுதி கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!