யாசகர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம் : எண்ண முடியாமல் திகைத்த போலீசார்… தான் ஒரு லட்சாதிபதி என்பதையே தெரியாமல் மரணமடைந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 1:57 pm

ஆந்திரா : யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கரப்பா மண்டலம் வேலங்கி கிராமத்தைச் சேர்ந்த சாது ராமகிருஷ்ணா. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலங்கி கிராமத்திற்கு வந்த ராமகிருஷ்ணா அங்கேயே தங்கி யாசகம் பெற்று பக்தர்களுக்கு பக்தி கயிறு கட்டி வாழ்ந்து வந்தார்.

வேலங்கி கிராம மீன் மார்க்கெட் அருகில் சிறிய அறையில் தங்கி அருகிலுள்ள ஆசிரமத்தில் உணவருந்தி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக ராமகிருஷ்ணா உயிரிழந்தார்.

இதையடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் உதவியுடன் தகனம் செய்தனர்.

அப்போது ராமகிருஷ்ணா வீட்டில் கிடைத்த 2 பையில் நூற்றுக்கணக்கான பாலிதீன் கவர்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் உள்ளூர் மக்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூபாய் 2 லட்சத்துக்கு மேலாக பணம் இருந்தது தெரியவந்தது.

இரவு நேரம் என்பதால் முழுமையாக பணத்தை எண்ண முடியாத நிலை தொடர்ந்து பணத்தை பையில் போட்டு சீல் வைத்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!