பிணவறையில் கிடந்த பெண் சடலங்களின் நிர்வாண வீடியோ ; அத்துமீறி பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தவரின் செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு ஷாக்..!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 5:41 pm

கர்நாடகா ; கர்நாடகா அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருக்கும் பெண் சடலங்களின் உடல்களை நிர்வாணமாக ஊழியர் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடகு மாவட்டத்தில் மடிக்கேரி என்னும் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடகதாலு பகுதியைச் சேர்ந்த 30 வயதான சையத் ஹுசைன் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு கொரோனா முன்கள பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

இதனிடையே, மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சையத்திற்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், சில தினங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், சையத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திடுக்கிடும் வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சையத் தான் வேலைப் பார்த்த பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். மேலும், அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசுவதையும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களையும் சையத் தனது செல்போனில் வைத்துள்ளார்.

இந்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலமான நிலையில், பிணையில் வெளியே வந்த சையத் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!