‘இந்தியாவின் இசைக்குயில்’ காற்றில் கலந்தது : பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.. இரங்கலில் இந்திய சினிமா!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2022, 10:21 am
Lata Mangeshkar Dead 1 - Updatenews360
Quick Share

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Nightingale of Bollywood Turns 89: 11 Little Known Stories About Lata  Mangeshkar!

இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக உள்ளதால்,வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில்நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும்,அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவரின் மரணம், திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lata Mangeshkar Biography - GSM FORUM TECH

தமிழில் ஆனந்த் திரைப்படத்தில் ஆராரோ பாடலையும், சத்யா திரைப்படத்தில வளையோசை பாடலையும் பாடி பிரபலமானார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 724

0

0