நிர்வாணமாக இரவில் வீடுகளை தட்டும் இளம்பெண்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி ; போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 4:32 pm
Quick Share

இளம்பெண் ஒருவர் இரவில் நிர்வாணமாக வீடுகளை தட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் இளம்பெண் ஒருவர், ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக சுற்றிவருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜன.,29ம் தேதி இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கதவை தட்டியதாக ராம்பூர் பகுதிவாசி ஒருவர், 31ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த உள்ளூர்வாசி கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்தப் பெண்ணை இரண்டு பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசாரால் அந்தப் பெண் யார்..? என்பதை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் எதற்காக இப்படி செய்கிறார் என்றும்..? இதுகுறித்த விவரங்களை சேகரிக்க அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் முன்பு கூறி உள்ளனர்.

Views: - 133

0

0