நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்… அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ் ; சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை போட்ட புதிய உத்தரவு!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 6:50 pm
Quick Share

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இயக்கநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்த விற்பனையில், மோசடி நடந்ததாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அதன்பேரில், அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பண மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு மற்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்று டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 537

0

0