பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பதவி.. பல மாநிங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் : பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 10:21 pm
Prakash Javdekar - Updatenews360
Quick Share

2024 லோக்சபா தேர்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களை மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பா.ஜ., நியமித்துள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அமைச்சர்களாக இருந்த பிரகாஷ் ஜவடேகர் கேரளாவுக்கும், மகேஷ் சர்மா திரிபுராவுக்கும் மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரான ஓம் மாத்தூர் சத்தீஸ்கருக்கும், உத்தர பிரதேச தேர்தல் குழு தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஜார்க்கண்டுக்கும், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பஞ்சாப் மற்றும் சண்டிகருக்கும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் குமார் ஹரியானாவுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக பா.ஜ.க, செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 154

0

0