மக்களுக்கு புத்தாண்டு பரிசு… வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 8:53 am

மக்களுக்கு புத்தாண்டு பரிசு… வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு..!!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கிகியாஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 22ம் தேதி 39 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை 918.50 ரூபாயில் நீடிக்கிறது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!