வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 12:49 pm

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் அளவுக்கு அந்நிய செலவாணி நமது நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

நமது நாட்டின் உட்கட்டமைப்பு செலவு 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் செலவீனம் ஆண்டுக்கு 40.90 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கையானது 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய வரிவிகித நிலைமையே தற்போதும் தொடர்கிறது. கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!