வீடியோ காலில் நிர்வாணமாக வரும் பெண்…. உங்களுக்கும் வரலாம் : ஆண்களே உஷார்.. பணம் பறிக்கும் வடமாநில கும்பல்… ஷாக் ரிப்போர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 11:25 am

நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்களை குறி வைத்து பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் காவல்துறையின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப்பிரிவு கடந்த 3 முதல் 4 மாதங்களல் 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளன.

ராஜஸ்தான், டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்நத் கும்பல் பீகாரில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆண்களை குறி வைத்து இந்த தொழிலை செய்துள்ளனர்.

அந்த கும்பலில் உள்ள பெண் ஒருவர், சம்மந்தப்பட் ஆணுக்கு முதலில் ஆபாச செய்தியை அனுப்புகிறார், அந்த ஆண் பதலிளித்தால் உடனே வாட்ஸ் அப்பில் சேட் செய்கிறார்.

பின்னர் வீடியோ காலில் ஆடைகளை கழட்ட தொடங்கும் பெண், மேலும் உடையை கழட்ட பதிலுக்கு அந்த ஆணையும் ஆடைகளை கழட்ட சொல்கிறார். ஆணும் உடைகளை கழட்ட, பின்னர் அந்த ஆணின் நிர்வாண வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து, பாதிக்கப்பட்டவரை மிரட்டி, வீடியோ, போட்டோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்தி பணம் பறிக்கின்றனர்.

இந்த கும்பல் ஏராளமான செல்போன் நம்பர்கள் மூலம் ஆண்களை தொடர்பு கொள்கின்றனர். அந்த கும்பலை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இது பற்றி காவல்துறையினர் கூறும் போது, அடுத்தடுத்து தெரியாத நம்பர் மூலம் வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம், தெரியாத பயனர்களுடன் வீடியோ காலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த குற்றத்தில் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் புகார் கொடுக்க காவல்துறை அணுகுவதில்லை, புகார்களை அளிக்க முன்வந்தால்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுக்க தயங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!