அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு ஏராளமான சலுகைகள் : இந்த துறையிலும் முன்னுரிமையா? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 6:33 pm

விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்து துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிக திறன் கொண்ட அக்னி வீரர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” என்று அழைக்கப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இத்திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!