பிரபல நடிகருக்கு சொந்தமான கட்டிடத்தை தரைமட்டமாக்கிய அதிகாரிகள் : 4 ஏக்கரை மீட்டது அரசு!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2024, 11:54 am
4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பிரபல நடிகரின் கட்டிடங்களை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.
ஹைதராபாத் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஏராளமான கட்டிடங்கள் ஹைதராபாத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.பிரபல நடிகர் நாகார்ஜுனா நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பது போல் ஹைதராபாத்தில் உள்ள தம்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் என் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் அரங்கம் ஒன்றை கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து கட்டியிருந்தார்.
இது பற்றி ஏராளமான புகார்கள் ஹைதராபாத் மாநகர நிர்வாகத்திற்கு மந்திர நிலையில் இன்று அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
தம்மிடிகுண்டா ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்து நாகார்ஜுனா அந்த கட்டிடத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.