விரட்டி விரட்டி வரட்டியால் அடி : ஒருவர் மீது ஒருவர் வரட்டியால் தாக்கிக் கொள்ளும் வினோத திருவிழா.. களைகட்டிய விசித்திர கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 11:19 am
Andhra - Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பக்தர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வறட்டியால் தாக்கி கொள்ளும் வினோத திருவிழா இன்று நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அஸ்பாரி மண்டலத்தில் உள்ள கைருப்பாலா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி மறுநாள் ‘பிடக்க’ (வரட்டி) திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கைருப்பாலா கிராமத்தில் புராணகாலத்தில் வசித்து வந்த பத்ரகாளி, வீரபத்ர சுவாமி ஆகியோர் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அந்த காதலை ஏற்க மறுத்த இரண்டு பேரின் பெற்றோர்கள் காதலர்களை பிரித்து விட்டனர்..

இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஆக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து இரண்டு பேருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வீரபத்திர சுவாமி, பத்திரகாளி ஆகியோர் வசித்து வந்த கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் கைருப்பாலா கிராமவாசிகள் யுகாதி மறு நாள் அன்று ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சாணத்தால் தயார் செய்யப்பட்ட வரட்டியை அங்கு உள்ள கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பனர்.

வறட்டி திருவிழாவை முன்னிட்டு இன்று சமர்ப்பிக்கப்பட்ட வறட்டிகளை கிராமவாசிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கையில் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஒரு குழுவினர் மீது மற்றொரு குழுவினர் வறட்டியால் தாக்கிக் கொண்டனர். இந்த பக்தி தாக்குதலில் சிலர் லேசான காயம் அடைந்தனார்.

அந்த காயங்களுக்கு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் மருந்தாக பூசப் பட்டது. பின்னர் வீரபத்ரசாமி, பத்திரகாளி ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.

Views: - 916

0

0