நழுவ விட்ட எதிர்க்கட்சிகள்.. அலேக்காக தூக்கிய பாஜக : அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 9:28 pm

நழுவ விட்ட எதிர்க்கட்சிகள்.. அலேக்காக தூக்கிய பாஜக : அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்!!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கலாமா என்பது குறித்து, ராமதாசும், அன்புமணியும் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

காங்கிரஸ், தி.மு.க., பங்கேற்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் இரண்டாவது கூட்டத்திற்கு பா.ம.க., அழைக்கப்படவில்லை. எனவே, பா.ஜ.,வின் அழைப்பை ஏற்று, தே.ஜ., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதே சரியாக இருக்கும் என, பா.ம.க., முக்கிய நிர்வாகிகள், அன்புமணியிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, இந்த கூட்டத்தில் பங்கேற்கும்போது, 2014 முதல்… பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருந்தும், மத்திய அரசில் பா.ம.க.,வுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாதது குறித்தும், பா.ம.க., வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது குறித்தும், பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் வலியுறுத்த வேண்டும்.

ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள அன்புமணிக்கு, பார்லிமென்ட் நிலைக் குழு தலைவர் பதவி கேட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பா.ம.க.,வின் 35-வது ஆண்டு விழாவையொட்டி வரும் 16ம் தேதி, சென்னை, மயிலாப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க, கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, அன்புமணி அறிவிக்க உள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?