நாட்டு நாட்டு பாடலுக்கு காரின் விளக்குகளை ஒளிர விட்ட டெஸ்லா… நன்றி சொன்ன RRR படக்குழு ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 3:48 pm

ஆஸ்கர் விருது பெற்ற `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு காரின் விளக்குகளை ஒளிர செய்து பாராட்டு தெரிவித்துள்ளது டெஸ்லா நிறுவனம்.

பிரம்மாண்ட ஹிட் திரைப்படமான பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த இப்படத்தில் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.

ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. அனைவரும் நாட்டு கூத்து பாடல் நடனத்தை ஆடி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்கர் விருது பெற்ற `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு காரின் விளக்குகளை ஒளிர செய்து பாராட்டு தெரிவித்துள்ளது டெஸ்லா நிறுவனம். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவிற்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இதற்கு டெஸ்லா நிறுவனமும் பதிலளித்துள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?