இறந்து போன எஜமானுக்காக பிணவறை முன்பு 4 மாதங்களாக காத்திருக்கும் செல்லப் பிராணி… நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 4:59 pm

கேரளா ; கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாயின் பாசம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையின் முன், கடந்த நான்கு மாதங்களாக, இறந்து போன தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய். உரிமையாளர் இறந்துவிட்டதை அறியாமல் நான்கு மாதங்களாக உரிமையாளருக்காக நாய் காத்திருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தார். நோயாளியுடன் நாயும் வந்துள்ளது. சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அவரை பிணவறைக்கு அழைத்துச் செல்வதை நாய் பார்த்ததுள்ளது. உரிமையாளர் இன்னும் அங்கேயே இருப்பதாக நாய் அந்த பகுதியிலேயே சுற்றி வருகிறது.

ஒரு செல்ல நாய் தனது எஜமானுக்காக பிணவறை முன் 4 மாதங்களாக காத்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!