புரட்டாசி மாசம் வந்தாச்சு… திருப்பதிக்கு போறீங்களா? அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : இலவச தரிசனத்திற்கு இவ்ளோ நேரமா?

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 2:41 pm

இன்று புரட்டாசி மாத முதல் நாள் என்பதால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் தற்போதைய நிலவரப்படி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 64 அறைகளிலும் நிரம்பி உள்ளனர்.

அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். எனவே 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக வழிபட முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.

300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

நேற்றைய திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 392 பேர் சுவாமி தரிசனம் செய்தனர் .நேற்று ஒரே நாளில் 4 கோடியே 92 லட்ச ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • The superstar has withdrawn from the film படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!