அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை… பிரதமர் மோடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 June 2022, 10:42 am

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் தொழில் துறை பெரிதும் முடங்கியது. இதனால், பல லட்சம் பேர் வேலையிழந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கும், புதிதாக பட்டம் படித்து முடித்தவர்களும் பயனடையும் வகையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை ஆய்வு செய்து, இந்தப் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுவும், இதனை மிஷன் மோட் எனப்படும் வேக கதியில் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பானது கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்தோர் மற்றும் புதிதாக பட்டம் பெறுவோருக்கு பெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!