திறமையற்ற, பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் பிரதமர் மோடி உலகப்புகழ்பெற்றவர் : சு.சுவாமி கடும் தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 12:47 pm

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கோர சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சி அடையவைத்தது.

இந்த விபத்தில் விபத்து நிகழ்ந்தது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவின், பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ரயில் என்ஜின் சரக்கு ரயிலின் மீது ஏறி நின்றது. ரயில் என்ஜினுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்த முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள், மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்த பெட்டிகள் விபத்தில் சிக்கியது.

இதில் வேலை தேடி சென்னை வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக மெயின்லைனில் செல்ல வேண்டிய ரயில் லூப் லைனில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

இப்போது நமக்கு தெரிகிறது: வேகமாக சென்ற அந்த ரயில், அந்த தண்டவாளத்தில் சென்றிருக்க வேண்டிய ரயிலே இல்லை; அந்த தண்டவாளமே சாதாரண ரயில்களுக்கானது.

ஆகவே, இந்த விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் சொன்னால்தான் பதவி விலகுவேன் என இருக்கக்கூடாது. ஆம், மோடி திறமையற்ற, பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகப் புகழ்பெற்றவர், அதற்கு அவர் விலையும் கொடுக்கிறார்.

அதற்கு மற்றுமொரு உதாரணம்தான் மணிப்பூர் கலவரம் என சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?