மகன் காரை ஏற்றி 2 பேரை கொன்ற வழக்கு… பிரபல தொழிலதிபரை கைது செய்து போலீஸார் அதிரடி…!!

Author: Babu Lakshmanan
21 May 2024, 11:51 am

மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதமான நிலையில், அந்த சிறுவனின் தந்தைய போலீசார் கைது செய்துள்ளனர்.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த Porsche கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு பார்ட்டி முடிந்து போதையில் அந்த காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். பத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சில வீடியோ காட்சிகளும் வெளியாகின. அந்த கார் அதிவேகமாகச் சென்ற பைக் மீது மோதும் ஒரு சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அதேபோல விபத்தை ஏற்படுத்திய அந்த 17 வயது சிறுவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் புகுந்த மழைநீர் ; இரு பிரிவுகள் தற்காலிக மூடல்!!!!

தொடர்ந்து அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கிய சிறார்களுக்கான நீதிமன்றம். விபத்து நடந்த 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்த நிலையில், சிறுவனின் தந்தையை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் வைத்து புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஐபிசி 304 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார், அந்த சிறுவனுக்கு 17 வயதாகும் நிலையில், மைனராக கருதக்கூடாது என்றும், வளர்ந்த நபராகவே கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!