பிரதமர் சொல்படி கேட்டு நடக்கும் பொம்மை தேர்தல் ஆணையம் : மம்தா பானர்ஜி கடும் தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 9:26 pm
EC
Quick Share

பிரதமர் சொல்படி கேட்டு நடக்கும் பொம்மை தேர்தல் ஆணையம் : மம்தா பானர்ஜி கடும் தாக்கு!!

மேற்குவங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது, பா.ஜ.க, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுகிறது, ஆனால் இந்த முறை அது நடக்காது.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க, எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது.

மேலும் படிக்க: ”எடா மோனே”… கொலை வழக்கில் ஜாமீன்.. ஆவேசம் பட பாணியில் கொண்டாடிய குண்டர்கள்..வைரல் VIDEO!

தேர்தல் அதிகாரிகள் எப்போதாவது சாதாரண மக்களின் போராட்டத்தை உணர்ந்திருக்கிறீர்களா?. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் பொது சிவில் சட்டம் (யுசிசி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிராக தனது கட்சியின் நிலைப்பாட்டை அசைக்க முடியாது என மம்தா பானர்ஜி பேசினார்.

Views: - 163

0

0