ராகுல் காந்தி சிறை செல்வது உறுதி.. மீண்டும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 11:37 am

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, தீர்ப்பை நீதிபதி இன்று வெளியிட்டார்.

அதாவது, அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம்

மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராகுல் காந்திக்கு விதிக்கப்ப்டட 2 ஆண்டு சிறை தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்திர தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!