ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா… ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 9:39 pm

ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா காந்தி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரூவில் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேற்றிரவு புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் வழியில் போபால் நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என முதலில் தகவல் வெளிவந்தது. பின்னர், இது முன்னுரிமைக்கான தரையிறக்கம் என்றும், மருத்துவ அவசரகாலத்தின் போது மேற்கொள்ளக்கூடியது என்று விமானத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி உள்ளிட்டோர் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்று அவர்களை சந்தித்தனர். பின்னர், அவர்களின் உடல்நலம் பற்றியும் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், சோனியா காந்தி ஆக்சிஜன் முக கவசம் ஒன்றை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், கருணையின் வடிவம் அழுத்தத்தின் கீழ் உள்ளது தாயே என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!