பாஜக-வால் தமிழகத்தை ஆளவே முடியாது.. மாஸ் காட்டும் ராகுல் காந்தி வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
4 June 2024, 3:26 pm

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்ணிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பாஜகவால் தமிழகத்தை ஆளவே முடியாது என்று ராகுல் காந்தி பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!