ரயில்நிலையத்தின் விளம்பர திரையில் திடீரென ஓடிய ஆபாசப் படம்… முகம் சுழித்த பயணிகள் ; விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 4:54 pm
Quick Share

ரயில்நிலையத்தின் விளம்பர திரையில் திடீரென ஆபாசப் படம் ஓடியதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

பாட்னா நகரில் அமைந்துள்ள பாட்னா ரயில்நிலையத்தை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். எப்போதும், பரபரப்பாக காணப்படும் இந்த ரயில்நிலையத்தில் வழக்கம் போல நேற்றிரவு ஆண்கள், பெண்கள் என குடும்பத்தோடு ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.

இரவு 9.30 மணியளவில் ரயில்நிலையத்தில் இருந்த டிஜிட்டல் விளம்பரப் பலகையின் திரையில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது. படத்தில் இடம்பெற்ற சத்தமும் அங்கிருந்த ஒலிப்பெருக்கியில் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த திரையை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். இதனால், ரயில்நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இதனை அறிந்த ரயில்வே நிர்வாகம், உடனடியாக திரை அணைத்தது. இதன்பின், விளம்பர ஒப்பந்ததாரர் நிறுவனம் மீது பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு இதுபோன்று நடந்ததா..? என்று கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 105

0

0