ரன்பீர் கபூர் – ஆலியா பட் கோலாகல திருமணம்…முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு: ரசிகர்கள் மத்தியில் என்ட்ரி கொடுத்த ஜோடி!!

Author: Rajesh
14 April 2022, 9:47 pm
Quick Share

பாலிவுட் நடிகர் ரன்பீர் – நடிகை அலியா திருமணம் முடிவடைந்து ரசிகர்கள் மத்தியில் தோன்றினர்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் இடையிலான திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. இதில் பாலிவுட் இயக்குனரும், முதன் முதலில் ஆலியா பட்டை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தவருமான கரண் ஜோகர் முதலில் ஆலியாவிற்கு மருதானி வைத்து சடங்கைத் தொடங்கி வைத்தார்.


இதில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் சகோதரிகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நடிகர் அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா நந்தா தனது கணவருடன் கலந்து கொண்டார். ரன்பீர் கபூர் தாயார் நீது கபூர் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மருதானி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்ககூடாது என்பதற்காக ஒவ்வொருவருக்கும் பாதுகாப்புக்கு நின்றவர்கள் கேமராவில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர் கொடுத்தனர். இதன் மூலம் நிகழ்ச்சியை யாரும் படமோ அல்லது வீடியோவோ எடுப்பது தடுக்கப்பட்டது.

Image


இன்று காலையிலேயே திருமண ஏற்பாடுகள் ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் முழுவேகத்தில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் காலையிலேயே திருமணம் நடைபெறும் வாஸ்து இல்லத்தில் குவிய ஆரம்பித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பே போலீஸார் வாஸ்து இல்லத்திற்கு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டது. செம்பூரில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு திருமணம் நடந்தது. திருமணத்தில் ஆலியா-ரன்பீர் கபூர் ஏழு முறை சுற்றி வந்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு புரோகிதர்கள் இத்திருமணத்தை நடத்தி வைத்தனர்.

Image

இத்திருமணத்திற்கு முதல் ஆளாக கரண் ஜோகர், நடிகைகள் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் வருகை தந்தனர். ரன்பீர் கபூர் மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ண ராஜ் பங்களாவில் இருந்து திருமணம் நடைபெறும் வாஸ்து இல்லத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

இருவரும் திருமணம் முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் முன்பு தோன்றினர். திருமணத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களை அவர்களின் கார்களை வழிமறித்து போட்டோ எடுக்கவேண்டாம் என்று போலீஸார் பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Image

விழாவில் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டனர். அவர்கள் வரும் முன்பாக அவர்களின் பாதுகாவலர்கள் வந்து பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தனர். நான்கு ஆண்டுகளாக காதல் ஜோடியாக வலம் வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா இப்போது கணவன் மனைவியாக மாறியிருக்கின்றனர்.

திருமணத்தில் விருந்தினர்களுக்காக 50 உணவு கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்தாலியன், பஞ்சாபி, மெக்‌சிகன், ஆப்கான் உணவு வகைகள் திருமணத்தில் பிரதான இடம் பிடித்திருந்தது. நீது கபூர் தனது மகனின் திருமணத்திற்கு டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்திருந்தார்.

ஆலியா பட் சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்காக 25 வகையான சைவ உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Views: - 1111

0

0