கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் தடுப்பூசி: ரூ.840லிருந்து ரூ.250ஆக விலை குறைப்பு…பயாலஜிக்கல்-இ நிறுவனம் அறிவிப்பு..!!

Author: Rajesh
16 May 2022, 6:15 pm
Quick Share

புதுடெல்லி: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைத்து பயாலஜிக்கல்-இ நிறுவனம் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.இங்கு இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். இதன்படி தனியார் தடுப்பூசி மையங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி உட்பட, தனது கொரோனா தடுப்பூசியான கோர்பேவாக்சின் விலையை ரூ. 840 லிருந்து ரூ. 250 ஆகக் குறைத்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல்-இ தெரிவித்துள்ளது.

மேலும் வரிகளுடன் சேர்ந்து ரூ.400 என்ற விலையில் பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசியின் விலை தனியார் தடுப்பூசி மையங்களில், வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் ரூ.990 ஆக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டபோது, கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு அதன் விலை ரூ. 145 என அரசின் தடுப்பூசி திட்டத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Views: - 756

0

0