கணவனை கைவிட்டு காதலனுடன் ரகசிய வாழ்க்கை : கசந்து போன காதலால் அரங்கேறிய கொலை நாடகம்…2வது காதலனுடன் சிக்கிய இளம்பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 6:02 pm
Love Murder -Updatenews360
Quick Share

ஆந்திரா : சக ஊழியருடன் ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில் கட்டாய திருமணம் செய்து காதலனுடன் ஓடி வந்த நிலையில் வேறொருவரின் நட்பு கிடைத்து கொலையில் முடிந்த சல்லாபக் காதலின் விபரத்தை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரூ அரசு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை செய்து வந்தவர் ஆசிபா. அவருக்கும் அதே மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக வேலை செய்து வரும் நசீர் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்களுடைய காதலை ஆசிபா வின் பெற்றோர் ஏற்க மறுத்தனர்.எனவே ஆசிபாவுக்கு சலீம் என்பவருடன் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்தநிலையில் மூன்றே மாதத்தில் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் ஆசிபா தன்னுடைய காதலன் நசீருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவர்களுக்கு ரகுமான் என்பவர் அறிமுகமானார். இதற்கிடையே ரகுமானுக்கு ஆசிபாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டனர். ஆனால் அவருடைய காதல் வாழ்க்கைக்கு நசீர் இடையூறாக இருப்பார் என்று இரண்டு பேரும் கருதினர்.

இந்தநிலையில், தான் ரகுமானை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று நசீர் இடம் கூறினார் ஆசிபா. மேலும் நாம் காதலித்த போது எடுத்து கொண்ட படங்கள் மற்றும் வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை நீ டெலிட் செய்ய வேண்டுமென்று நசீரிடம் ஆசிபா கூறினார்.

இதற்காக நசீரை ஓர் இடத்திற்கு வரவழைத்த ஆசிபா ரகுமான் ஆகியோர் அவருடைய செல்போனில் இருந்த படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை அழித்தனர்.

ஆனாலும் தங்களுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு நசீர் இடையூறு ஏற்படுத்துவார் என்று கருதிய ஆசிபா, ரகுமான் ஆகியோர் நசீரை கொலை செய்ய திட்டம் போட்டனர்.

நேற்று முன்தினம் நசீர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஆத்மகூரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பாதையில் காருடன் காத்திருந்த ரகுமான் நசீர் மீது காரை மோத விட்டார்.

இந்த சம்பவத்தில் நசீர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ரகுமானை பிடிக்க முயன்றனர்.

எனவே ரகுமான் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார். நசீர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த ஆத்மகூரூ போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து நசீரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நசீர் தனக்கும் ஆசிபாவுக்கும் இடையே இருந்த காதல், அவருக்கு சலீம் என்பவருடன் நடைபெற்ற திருமணம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட விவாகரத்து, பின்னர் ரகுமானுக்கும் ஆசிபாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் ஆகிய அனைத்தையும் வாக்குமூலமாக கூறினார்.

இதையடுத்து ரகுமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் ரகுமான், ஆசிபா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 919

0

1