தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் சீண்டல்…. அழுது கொண்டே வீடு திரும்பிய மாணவி : ஆசிரியருக்கு தர்ம அடி….. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 4:10 pm
Teacher Attacked - Updatenews360
Quick Share

ஆந்திரா : தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கரெடிகுடெம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த ஆசிரியர் சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இன்று அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர்,

அங்கிருந்த சக ஆசிரிய, ஆசிரியைகள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் ஆவேசத்துடன் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 708

0

0