மீண்டும் அதிர்ச்சி… தெருநாய்களால் ஸ்கூட்டியில் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் : ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 8:46 am

தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் 4 வயது சிறுவனை தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சேர்த்து கடித்து குதறி கொன்றது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தெருநாய்கள் சுற்றி வளைத்தது. ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்திருவரை நாய்கள் கடித்தது.

அப்போது முன்னே அமர்ந்தவர் சற்று சுதாரித்து கீழே இறங்கி கற்கைளை எடுத்து வீசினார். உடனே தெருநாய்கள் தலைதெறிக்க ஓடியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பின்னர் அமர்ந்திருந்தவரை நாய்கள் கடித்து குதறியதால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தெருநாய்களால் நாளுக்கு நாள் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் நாய்களை பிடிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

  • retro movie world wide collection report அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!