திருமணம் செய்யச் சொல்லி டார்ச்சர்.. அத்துமீறிய நபர்… நீதிகேட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி..!!

Author: Babu Lakshmanan
11 March 2023, 10:20 am
Quick Share

திருமணம் செய்யுமாறு நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், நீதி கேட்டு முதலமைச்சருக்கு சிறுமி ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் – கன்னாஜ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் வழியில் சக்லைன் என்ற நபர் தகாத சைகைகளை காண்பித்து தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இது தொடர்பாக தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், அவரது உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டவருடன் சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நபரும் சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு செய்யத் தொடங்கினார்.

இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் புகாரளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமியின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதனிடையே, கன்னாஜ் காவல் கண்காணிப்பாளர் சிறுமியின் புகார் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Views: - 69

0

0

Leave a Reply