ரசிகர் மீது இத்தனை கொலைவெறியா? ஆணுறுப்பை சிதைத்து கொடூரமாக கொன்ற நடிகர் : திடுக்கிடும் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 8:04 pm

கர்நாடகாவில் ரசிகரையே பிரபல நடிகர் ஆட்களை வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இதில் தெரியப்படாத பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனுடைய தீவிர ரசிகராக இருந்தார்.

இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது, ரோணுகா சாமி, சித்ரதுர்காவில் உள்ள வெங்கடேஸ்வரா லே அவுட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போதுதான் திருமணாமாகி மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மருந்துக்கடையில் வேலை பார்த்து வரும் ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். தர்ஷனும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி, இதற்கு காரணம் அவருடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை பவித்ரா கவுடாதான் என உறுதி செய்தார்.

பின்னர் பவித்ரா கவுடா குறித்து ஆபாசமான வார்த்தையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தல் வைலரான இந்த பதிவுகளை பார்த்த பவித்ராஇ ரேணுகாசாமி யார் என தர்ஷன் ரசிகர்கள் மன்ற தலைவர் ராககேந்திராவை தொட்பு கொண்டு கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளார்.

கடந்த ஜூன் 8ஆம் தேதி ரேணுகா சாமியை கண்டுபிடித்து, தர்ஷனை சந்திக்கலாம் என பெங்களூரு அழைத்து வந்துள்ளனர். தர்ஷனின் நெருங்கிய நண்பர் வினய் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ரேணுகாசாமியை அடைத்து வைத்து சிதரவதை செய்துள்ளனர்.

அன்றைய நாள் இரவு 7 மணிக்கு தர்ஷன் அங்கு வந்திருந்ததும், காலை 3மணியளவில் வெளியே சென்றதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ரேணுகாசாமியை செருப்பால் அடித்தும், தர்ஷன் தனது பெல்ட்டை கழற்றி கொடூரமாக தாக்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் ரேணுகாசாமியின் ஆணுறுப்பில் உள்ள விறைப்பையின் தோளை மட்டும் உரித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளுது. இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிவர காரணமாக இருந்தது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த பவன் என்பவர் மூலமாகத்தான்.

அதாவது இவர்கள் ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் ரேணுகாசாமி இறந்து போனதை பார்த்த பவன், தர்ஷனுக்கு தகவல் கொடுத்து, இதை மறைக்க 30 லட்சம் வாங்கியுள்ளார்.

பின்னர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கொலை நடந்ததாக பொய்யான புகாரை கொடுக்க, முதலில் இந்த கொலை வழக்கில் கார்த்திக் என்பவர் சரணடைய முன்வந்துள்ளார். அவருக்கு ₹5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில்தான் தர்ஷன், பவித்ரா என ஒட்டுமொத்தமாக அவரது கும்பலும் சிக்கியுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!