தெருநாயை பாசமாக அழைத்த நபர்… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 8:25 am

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தெருநாயை வீட்டு வளாகத்தில் வீசி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை குடங்ஙாவிளை பகுதியை சேர்ந்தவர் நிஷின் ராஜ். இவரது வீட்டு முன்பு அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்த 3 நபர்கள், அங்கிருந்த தெருநாயை அழைத்துள்ளனர்.

நாயை அருகில் வரச் செய்த மூவரில் ஒருவர் திடீரென அதனை தூக்கி நிஷின் ராஜின் வீட்டு வளாகத்திற்குள் வீசியுள்ளார். இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் அக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சம்பவம் தொடர்பாக நிஷின்ராஜ் நெய்யாற்றின்கரை போலீசில் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

https://player.vimeo.com/video/785329799?h=29f2898d82&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?