ஓடும் ரயில் முன் ரீல்ஸ் எடுத்த மாணவர் : ரியலாக மாறிய அதிர்ச்சி சம்பவம்… அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்.. ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 11:50 am

ஓடும் ரெயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார்.

தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்‌ஷய் ராஜ் (வயது 17 ) பிளஸ்ட் 2 படித்து வந்தார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். ஓடும் ரெயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.
ஆனால் வேகமாக சென்ற ரெயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அக்‌ஷய் பின்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காசிப்பேட்டை ரெயில்வே போலீசார் கூறுகையில், அக்‌ஷய் தனது இரண்டு நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவில் இருந்து வாரங்கல் செல்லும் ரெயில் செல்லும் பாதையில் நின்று உள்ளார்.

அப்போது வேகமாக சென்ற ரெயில் தலையில் ரெயில் மோதி உள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என கூறினார்கள். கடந்த மே மாதம், வேலூர் மாவட்டத்தில் செல்பி வீடியோ எடுக்க முயன்ற 22 வயது வசந்த குமார் ரெயிலில் அடிபட்டார். இதில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்த தனது சமூக ஊடக தளங்களுக்கு ரீல்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்து, கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!