மேலும் ஒரு கல்லூரி மாணவனுக்கு ரேகிங் டார்ச்சர்… வெளியான அதிர்ச்சி வீடியோ.. கொலை முயற்சி வழக்குப்பதிவு..!!

Author: Babu Lakshmanan
12 November 2022, 4:40 pm

தெலங்கானா : பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர்கள் ரேகிங் என்ற பெயரில் அடித்து கொடிமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவாலா பகுதியில் IBS என்னும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவனை, ரேகிங் என்ற பெயரில் சில மாணவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அந்த மாணவனை கொடூரமாகத் தாக்கும் சீனியர் மாணவர்கள், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்துள்ளனர். இதனை அங்கிருந்த சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோவில் ‘அல்லா ஹு அக்பர்’ எனச் சொல்லுமாறு ஒவ்வொருவராக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்த நபரும் வலி தாங்க முடியாமல் அழுது கொண்ட அதனை சொல்கிறார். மேலும், அந்த மாணவனை அடித்தே கொல்ல வேண்டும் என்று அங்கிருந்த சீனியர்களில் ஒருவர் சொல்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் பேரிலும், வைரலாகிய வீடியோவின் அடிப்படையிலும், கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!