பாஜக எம்எல்ஏ திடீர் மறைவு : துணை சபாநாயகராக பதவி வகித்த ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவால் மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 9:50 am

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 56.

ஆனந்த் மாமணி சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, டருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பசவராஜ் பொம்மை, “எங்கள் கட்சியின் எம்எல்ஏவும் மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆனந்த் மாமணியின் இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் வழங்கட்டும். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?