பாஜகவில் இணையும் சூப்பர் ஸ்டார்…? தேர்தல் பிரச்சாரங்களில் களமிறங்கவும் திட்டம்.. பரபரப்பில் அரசியல் களம்..!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 1:01 pm

தேசிய கட்சியான பாஜகவில் பிரபல நடிகர் இணையப் போவதாக தகவல் வெளியாகியிருப்பது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனிடையே, பாஜகவில் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறையின் பிரபலங்களும் இணைவது வாடிக்கையாகி வருகிறது.

Bjp Mla Porn - Updatenews360

இதனிடையே, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

கருத்துக்கணிப்பு படி ஆளும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பதில் சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவினர் இந்தக் கருத்து கணிப்பை போலி எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகரும், கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து அக்கட்சியில் சேர இருப்பதாகவும், விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போவதாக தகவல்கள் உலவி வருகின்றன.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?