ஓடும் ரயிலில் செல்போன் பறித்த இளைஞர்: திருடனை துரத்தி சென்ற ஆசிரியர் ரயில் மோதி பரிதாப பலி…!!

Author: Rajesh
17 May 2022, 3:20 pm

மத்தியபிரதேசம்: தனது செல்போனை திருடிச் சென்ற நபரை துரத்திச் சென்ற ஆசிரியர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷதோல் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று பணி முடிந்து, தனது சொந்த ஊரான சாகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணியளவில் அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், மனோஜ் நேமாவிடம் செல்போனை கேட்டுள்ளார். தனது நண்பருக்கு அவசரமாக தகவல் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியதால், மனோஜ் நேமாவும் செல்போனை கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர், ரயிலின் வேகம் சற்று குறையவே, செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதை பார்த்த மனோஜும் ரயிலில் இருந்து குதித்து அவரை துரத்திச் சென்றார். அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் நேமா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?