அடக் கொடுமையே… எருமை மாட்டை கூட விட்டு வைக்காத கொடூரம் : கூட்டுப் பாலியலால் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 11:05 am

போதையின் உச்சிக்கே சென்ற மர்மநபர்கள் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் அருகே உள்ள தொக்கலபூடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பில்லி சத்யநாராயணா.

இம்மாதம் ஐந்தாம் தேதி காலை வீரவாசரம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் என்னுடைய விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த எருமையை நேற்று இரவு சிலர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.

அவர்களை பிடித்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று மனு அளித்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் நாகராணியிடம் தன்னுடைய குற்றச்சாட்டை மனுவாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கால்நடை கால்நடை மருத்துவர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எருமைக்கு வைத்திய பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.

போலீசார் அங்கு சென்று அந்த பகுதியை ஆய்வு செய்து எருமையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தற்போது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!