அமலாக்கத்துறை வசம் சிக்கினார் பிரபல மூன்றெழுத்து நடிகர் : புதிய படத்துக்காக சட்டவிரோத பணிபரிமாற்றம்?

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 7:38 pm
EID - Updatenews360
Quick Share

வளர்ந்து வரும் பிரபல நடிகர் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை வசம் சிக்கினார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் புகார் எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Views: - 360

0

0