வீட்டுக்குள் புகுந்து மென்பொறியாளரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் : ஷாக் சிசிடிவி காட்சி.. செல்பி வீடியோ எடுத்து கதறிய இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 1:04 pm
Youth Attacked - Updatenews360
Quick Share

ஆந்திரா : கும்பலாக வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் மென்பொருள் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பலமனேர் பாத்த பேட்டை போலீஸ் லைன் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன். மென்பொருள் பொறியாளரான இவர் வொர்க் பிரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்குள் புகுந்த சில இளைஞர்கள் சுத்தியால் அடித்தும் கால்களால் உதைத்தும் கண்மூடித்தனமாக நிரஞ்சன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தீவிர காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் புகுந்த சில இளைஞர்கள் என்னை கண்மூடித்தனமாக தாக்கி வீட்டை உடனடியாக காலி செய்து செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக
நிரஞ்சன் செல்பி வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து பலமனேர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 531

0

0