யானையை கோபப்படுத்திய பாகன் : ஆக்ரோஷத்துடன் பாகன்களை மிதித்த யானை..பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 6:08 pm
Elephant Attack - Updatenews360
Quick Share

கேரளா : கொல்லம் அருகே பாகன்களை காலால் மிதித்த யானையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் கோவில் திருவிழாவிக்காக இரண்டு பாகன்கள் தலைமையில் யானை அழைத்து வரப்பட்டது. அப்போது யானையின் மீது ஒரு பாகன் அமர்ந்து வர, மற்றொரு பாகன் யானை முன்னே நடந்து வந்தார்.

அப்போது யானையின் மேல் இருந்து பை கீழே விழுந்ததால், பாகன் கீழே இறங்கி பையை எடுத்துள்ளார். அப்போது யானையின் முன்னே இருந்த மற்றொரு பாகன், அங்குசத்தை வைத்து யானையின் முன்னங்காலில் தாக்கியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த யானை பாகன்களை காலால் மிதித்தும், தும்பிக்கையால் அடித்து தாக்கியது.

இதையடுத்து யானையின் வாலை பாகன் பிடித்து இழுத்துள்ளார். இதனால் மேலும் கோபடைந்த யானை தும்பிக்கையால் பாகனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பாகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி காவல்துறை விசாரணையில் யானைக்கு பயந்து தாக்கியதாக பாகன் கூறியுள்ளார். பாகன்களை யானை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.

Views: - 409

0

0