ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களை மறித்த ஆளுங்கட்சி தொண்டர்கள் : கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 1:29 pm

ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களை மறித்த ஆளுங்கட்சி தொண்டர்கள் : கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் ஆளுநராக சிவி ஆனந்த போஸ் பதவி வகித்து வருகிறார்.

பொதுவாகவே பாஜக அல்லாத முதலமைச்சர் ஆளும் மாநிலங்களில் ஆளுர் மூலமாக பாஜக அரசு குடைச்சல் கொடுத்து வருகிறது. அதில் மேற்கு வங்கம் மாநிலமும் பாதிகப்பட்டுத்தான் உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட (Sandeskhali) பகுதியில், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை ஷேக் ஷாஜகான் (Sheikh Shajahan) எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்டு நடத்த சென்றது. அங்கு அவரது ஆதரவாளர்களால் அமலாக்க துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

ஷேக் அமலாக்க துறையிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை அமலாக்க துறை தேடி வருகிறது.

இது தொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்களுக்கும், ஷேக்கின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து அறிய இன்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் அப்பகுதிக்கு விரைந்தார்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவரது பாதுகாப்பு வாகனங்களை ஷேக்கின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

அவரது காரின் அருகே பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?