காதல் திருமணத்திற்கு பின் முதன்முறையாக திருப்பதிக்கு வந்த நட்சத்திர தம்பதி : சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ஓபன் ஸ்டேட்மண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 1:11 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நட்சத்திர ஜோடி நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இவர்களுக்கு கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக சாமி தரிசனம் செய்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, இரண்டு படங்கள் கைவசம் உள்ளதாகவும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் திருப்பதிக்கு வந்தது மகிழ்ச்சி என கூறினார்.

பெரிய திரைக்கு முழுக்கு போடுவதாக சூசகமாக தெரிவித்த நிக்கி கல்ராணி சீரியல்களில் தலைகாட்ட உள்ளதாக கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!