6வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… ஆஜராகிறாரா கெஜ்ரிவால்? ஆம் ஆத்மி கட்சி ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 2:25 pm

6வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… ஆஜராகிறாரா கெஜ்ரிவால்? ஆம் ஆத்மி கட்சி ஆவேசம்!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து3,4,5 என அடுத்தடுத்து சம்மன் அனுப்பியும் மதிக்காத கெஜ்ரிவாலுக்கு தற்போது 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆறாவது சம்மன்ல் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகமாட்டர் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் சட்டவிரோதமாமனவை, திரும்ப திரும்ப சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!