துணை முதலமைச்சர் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை திருடிய கொள்ளையர்கள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 6:41 pm

துணை முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை சத்தமே இல்லாமல் போலீசார் பிடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் கொள்ளையர்கள் பிடிப்பட்டதால் தற்போது தெரிய வந்துள்ளது.

துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா அமெரிக்காவில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஆனால் இந்த திருட்டு குறித்து தெலுங்கானா போலீசார் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஏழாவது நடைமேடையில் ஜி.ஆர்.பி போலீசார் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு நபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததோடு போலீசார் பார்த்தது அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதனால் போலீசார் உஷாராகி அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அவர் வீடுகளில் கொள்ளையடிக்கு திருடர்கள் என ஒப்புக்கொண்டனர்.

Theft in Deputy CM House

இவர்கள் பீகாரைச் சேர்ந்த ரோஷன்குமார் மண்டல் மற்றும் உதய்குமார் தாக்கூர் என்பதும் தெலங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடியதாக காரக்பூர் ஜிஆர்பி எஸ்.பி. தேபஸ்ரீ சன்யால் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால் தெலங்கானாவில் துணை முதல்வர் பதவியில் இருப்பவர் வீட்டிலேயே கொள்ளையடிக்கப்பட்டால், சாமானியர்களுக்கு உண்மையான பாதுகாப்பு இருக்கிறதா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: நாங்க சொல்றத மட்டும் செய்… மசாஜ் சென்டரில் பெண்களிடம் ஆபாசமாக நடந்த கும்பல்.. அலறி ஓடிய ஊழியர்கள்!

தெலங்கானாவில் துணை முதல்வர் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவரது வீட்டில் திருடிய திருடர்களை மேற்குவங்க போலீசார் கைது செய்ததால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தது இல்லாவிட்டால் துணை முதல்வர் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து கூறும் வரை இந்த விவகாரம் தெரியாமலேயே இருந்திருக்கும் என போலீசாரே கூறுகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா எக்ஸ் பதிவில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மைன் எக்ஸ்போ-2024-ஐ பார்வையிட்டதாகவும், சுரங்கத் துறையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் தெலுங்கானாவில் கனிம தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் துணை நிறுவனங்களை அமைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி கனிமங்களை ஆய்வு செய்ய உதவி கோரியதாகவும், மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற பல்வேறு அம்சங்களை அவர்களுக்கு விளக்கியதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!