மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 9:41 pm

மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்!

2021-22 ம் ஆண்டில் டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 2023 மார்ச் 09ம் தேதி கைது செய்தது.

டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் கோரி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில் அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மே. 17-ம் தேதி தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்தா ஷர்மா மே 21-ம் (இன்று )தேதி ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க: ஆன்மீகத்தில் பற்று இல்லையென்றால் கோடிப்பணம் இருந்தும் புண்ணியம் இல்லை : ஆர்பி உதயகுமார் சூசகம்!

இன்று நடந்த விசாரணையில் , மணீஷ் சிசோடியா சாட்சியங்களை சிதை்துள்ளார், தனது பொது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமின் வழங்க இயலாது, மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

முன்னதாக மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து அவரது காவலை கீழ்கோர்ட் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா மே.31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!