பாஜக அறிக்கையில் எதுவுமே இல்லை.. மக்களை பற்றி யோசிக்கலையா? ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 6:39 pm

பாஜக அறிக்கையில் எதுவுமே இல்லை.. மக்களை பற்றி யோசிக்கலையா? ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.

இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது – அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.

இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்” என்று பதிவிட்டுள்ளார்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?